இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து ரிஷப் விலகினார்.
இவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ பேசுகையில், ”சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணியில் ஆடவுள்ளதால், அவர்களுக்குப் பதிலாகப் பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
கே.எஸ். பரத் ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
UPDATE – K S Bharat named back-up wicket-keeper for 2nd ODI.
Full details here – https://t.co/c9Pk84rkbM #TeamIndia pic.twitter.com/ulOi6aKnRg
— BCCI (@BCCI) January 17, 2020