Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை….. ஜனவரி 31 வரை காலஅவகாசம்…. சேலம் கலக்டெர் தகவல்…..!!

வேலைவாய்பில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெறவேண்டுமானால் ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்த்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையின்படி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை இரட்டிப்பாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 600 என மாதம் தோறும் வழங்கப்படும் என கூறப்பட்டது.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூபாய் 600 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 750 பட்டதாரி படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 1000 என வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி இத்திட்டத்திற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இந்த உதவி தொகையை பெறுவதற்கு பழைய வேலைவாய்ப்பு அட்டை, புதிய ஆன்லைன் அட்டை உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை நேரில் வந்து கொடுத்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதனைப் பெற விரும்புவோர் வேலைவாய்ப்பகத்தில்  பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அதனைப் புதுப்பித்து இருக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்ப வருமானம் வருடத்திற்கு 72 ஆயிரத்திற்கும் கீழ் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மேலும் எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் 40லிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி  மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |