Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தொடங்க வேண்டும்…. ஆலை முன்பாக ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு அரவையை தொடங்குமாறு கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலாளராக குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளரான தேவதாஸ் மற்றும் விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சர்க்கரை ஆலை அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

Categories

Tech |