ஆஸ்துமா பிரச்சினை இரவில் மட்டும் ஏன் அதிகமாக வருது. இது மரணத்திற்கான அறிகுறியா? உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஆஸ்துமா நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. ஆஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாகும். குழந்தைகள் என்று வரும்போது சுவாசப் பாதையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கும். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். இரவில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படு.ம் இது மிகவும் ஆபத்து. ஆஸ்துமா நோயாளிகள் பெரிதும் அவதிப்படுவது மூச்சுவிடுதல் பிரச்சனையால். அதிலும் குழந்தைகள் என்றால் வாந்தி எடுக்கும் வரை இருமலை நிறுத்தமாட்டார்கள்.
மூச்சு விடுதலில் மூச்சு எடுப்பதில் அதிக சிரமம் ஏற்படும். ஆஸ்துமா பெரியவர்களுக்கும் இந்த மோசமான விளைவை உண்டாக்கும். மூச்சுத் திணறல் என்பது பகலை காட்டிலும் இரவில் தான் அதிகம் ஏற்படும். உடல் சோர்வு, எரிச்சலும் கூடுதலாக இருக்கும். பெரியவர்கள் இதை உணர்ந்தாலும் குழந்தைகளுக்கு இதை சொல்ல தெரியாது. தூக்கத்தின்போது ஆஸ்துமா அறிகுறிகள் மோசமாக இருக்கும். இரவு நேரத்தில் மூச்சுத்திணறல் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது . உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இல்லை என்றால் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் வரக் காரணமாகிவிடும்.
தூசி நிறைந்த படுக்கையறையை முதலில் வைத்திருத்தல் கூடாது. வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தூசி இருந்தால் அது ஒவ்வாமை ஏற்படும். அதிலும் செல்லப்பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் அதிக ஒவ்வாமையை உண்டாக்கும். இரவு நேரங்களில் படுக்கை அறையை சுத்தம் செய்துவிட்டு உறங்க வேண்டும் . அதிக நேரம் விழிப்புடன் இருத்தல் கூடாது. குளிர்ந்த காற்று ஏசியை பயன்படுத்தக்கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் ஏசியை பயன் படுத்தினால் சுவாசப் பாதையை மிகவும் பாதிக்கும்.
ஆஸ்துமா நோயாளிகள் இரவு நேரங்களில் வேலை செய்து பகல் நேரங்களில் தூங்கும்போது இந்த சுவாச பாதைகளில் உள்ள தாக்குதல்களை உண்டாக்கும். தூங்கி 4 மணி முதல் 6 மணி நேரத்திற்குள் இந்த சுவாசப்பாதை மோசம் அடைவதாக சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால் இரவு நேரத்தில் கோடை காலமாக இருந்தாலும் ஏசியில் படுக்க வைக்க கூடாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை படுக்கை அறை, தலையணை உறைகளை மாற்றவேண்டும். வாரத்தில் ஒரு முறையாவது இவற்றை வெயிலில் போட்டு காய வைத்து எடுக்கவேண்டும். படுக்கைக்கு பக்கத்தில் இன்ஹேலர் வைத்திருப்பதன் மூலம் பாதிப்பு தீவிரமாகும் போது உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.