Categories
உலக செய்திகள்

அஸ்டராஜெனெகா தடுப்பூசியால் அரிதான ரத்த உறைவு… மார்கோ கவாலெரிஉறுதி…!!!

அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் கொண்டவர்களுக்கு தற்போது அரிதான ரத்தம் உறைதல் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா  பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்டராஜெனெகா  போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த  தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்டு என்று விநியோகம் செய்து வருகிறது.

இந்த தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பியாவில்  அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு  பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறியு ள்ளனர். ஆகையால் சில காலங்களுக்கு இதனை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ததில் ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த  அஸ்டராஜெனெகா தடுப்பூசியால் அரிதான ரத்தம் உறைதல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் தடுப்பூசி பிரிவின் தலைவர் மார்கோ கவாலெரி கூறும்போது  அஸ்டராஜெனெகா தடுப்பூசியை  செலுத்தி கொண்டவர்களுக்கு அரிதான ரத்தம் உறைதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது .

இதனை சரி செய்வது மிக மிகக் கடினம் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.அதன்படி  தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸ் அபாயங்களுக்கு தடுப்பூசி பலனை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |