அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சனை இந்த தடுப்பூசியினை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு மனிதர்களின் மனதில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல்முறை படுத்திவருகின்றன. இதுதொடர்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. அப்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இதனால் அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அஸ்ட்ரா ஜனகா தடுப்பூசி போடப்பட்ட 7 பேருக்கு மூளையில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் பயந்து அதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர் என்று ஜெர்மனி தெரிவித்தது. இந்த அஸ்ட்ராஜெனாக மருந்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டை இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டதாக ஸ்பெயின் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஐரோப்பியாவில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவர்களில் 37 பேருக்கு மட்டும் மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சனை இருந்ததாக அஸ்ட்ராஜெனகா கூறுகின்றன. ஆனால் ரத்தம் உறைதல் பிரச்சினைக்கும் எங்களின் மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதி படுத்தி அதனை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தகவலை கூறியுள்ளது.
இந்த தடுப்பூசியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்து உலகெங்கும் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதே தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. எனவே இந்த தடுப்பு மருந்து போடுவது குறித்து நாளை மறுநாள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாடு அமைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளனர்.