அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரானா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியில் , ” பன்றியின் கணையத்திலிருந்து டிரிப்சின் என்ற புரதப் பொருள் எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த நிறுவனத்தின் தடுப்பூசி ஹராம் என்பதால் அதனை இஸ்லாமியர்கள் யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் இணையதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டது. எனினும் அவசர கால கட்டத்தில் இந்த நிறுவன தடுப்பூசியை போடுவதில் தவறும் இல்லை என்றும் அதே கவுன்சில் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த கவுன்சிலின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், ” எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியில் பன்றியின் புரதப்பொருள் எதுவுமே சேர்க்கவில்லை” என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கூறியுள்ளது.