ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டாவது நபருக்கு ரத்த கட்டிகள் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ஆல்பர்ட்டாவில் வாழும் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு திடீரென்று இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண்ணுக்கு அபூர்வமான இரத்தக்கட்டிகள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது நபருக்கும் உருவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கனேடிய அரசு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்துவது என முடிவு செய்துள்ளது.