Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் பெண் மரணம்…. உறுதி செய்தார் தலைமை மருத்துவர்…. கனடாவில் பரபரப்பு….!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் ஆக்ஸ்போர்ட் மாகாணத்தில் 50 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  கொண்ட சில தினங்களில் உயிரிழந்துள்ளார் என அந்த மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட immune thrombotic thrombocytopenia பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதியானது என்று மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார்.

மேலும் எந்த ஒரு மரணமும் துன்பகரமானதாக இருந்தாலும் அதைவிட கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணம் அல்லது அனுபவிக்கும் கொடுமையே பெரியதாகும். மேலும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ஏற்படும் ஆபத்தை விட இது மிகவும் அதிகமாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்வது அவசியம் என்று மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார்.

Categories

Tech |