Categories
உலக செய்திகள்

பொது முடக்கமா…? எங்களுக்கு தேவையில்ல…. தில்லாக பேசிய அமைச்சர்….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்த தங்கள் நாட்டிற்குள் பொதுமக்கள் போட தேவையில்லை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார துறை அமைச்சரான கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து தங்கள் நாட்டில் பரவும் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டி பேசிய ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சரான கிரெக் ஹன்ட் தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் பரவலை தடுக்க பொது முடக்கம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கோடை காலம் வருவதால் அங்கு மிகவும் மாறுபட்ட சூழ்நிலை நிலவும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாலும் பொது ஊடகம் போன்ற மிக கடுமையான கட்டுப்பாடுகள் தங்கள் நாட்டிற்குள் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |