Categories
உலக செய்திகள்

“தடை செய்த” தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் அச்சம்… ஆபத்து ஏற்படுமா? இல்லையா…? பிரான்ஸ் சுகாதார அமைச்சர் விளக்கம்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலிவர் வேரான் விளக்கம் அளித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் பிரபல நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா இல்லையா என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் சில தகவல்களை கூறியுள்ளார்.

ஆஸ்திரியாவில் இந்த நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு 54 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் அந்நாட்டு அரசு அஸ்ட்ராஜெனேகா  நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடையை விதித்தது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளும் இந்த நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது.காரணம்  அஸ்ட்ராஜெனேகா  நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்டு முதியவர்களில் பலருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பிரான்சிலும் தற்போது அந்த நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்கு  தடுப்பூசி செலுத்தப்பட்ட 5  மில்லியன் பேரில் 1.3 மில்லியன் பேருக்கு அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரான், ” இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது. இதற்காக அவர்கள் மேற்கொண்டு எதையும் செய்ய தேவையில்லை” என்று அறிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனேகா  நிறுவனத்தின் தடுப்பூசி முதன்முதலாக பிரான்சுக்கு  கொண்டு வந்த போது அதனை முதன் முதலில் போட்டுக் கொண்டவர் ஆலிவர் வேரான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |