Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான சிறந்த தடுப்பு மருந்து… இறுதிகட்ட சோதனையில் வெற்றி… வெளியான முக்கிய தகவல்..!!

Covid-19 தடுப்பு மருந்து கலவையான அஸ்டிராஜெனகாவின் “Antibody Cocktail” இறுதி கட்ட சோதனையில் நல்ல பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covid-19 தடுப்பு மருந்து கலவையான அஸ்டிராஜெனகாவின் “Antibody Cocktail” இறுதி கட்ட சோதனையில் நல்ல பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடுமையான நோய்த்தொற்று பாதிப்புகளையும் அஸ்டிராஜெனகாவின் AZD7442 தடுப்பு மருந்து கலவை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தடுப்பு மருந்து கலவையை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே பயன்படுத்தினால் இறப்பு அபாயத்தை 50 சதவிகிதம் குறைக்க இயலும் என்று அஸ்டிராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இந்த நோய் தடுப்பு மருந்து நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். அதேசமயம் அஸ்டிராஜெனகா நிறுவனம் அதிகாரிகளுடன் இந்த தடுப்பு மருந்து கலவையின் சோதனை தரவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனாவை எதிர்த்து போராட Antibody Cocktail தடுப்புமருந்து உதவும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையே அஸ்டிராஜெனகா நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டாளரான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இந்த தடுப்பு மருந்து கலவையை அவசர பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |