ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் சில ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா-வின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இந்நிலையில் Conservative எம்.பி ஸ்டீவ் ப்ரெய்ன், ” குறிப்பிட சில ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி விட்டது. இதற்கு பிறகு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான இந்நிறுவனத்தின் தடுப்பூசி மீது நம்பிக்கையை உருவாக்க போரிஸ் ஜான்சன் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போகிறார் ? ” என்று கேள்வி கேட்டார். இதற்கு போரிஸ் ஜான்சன், ” நான் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்கிறேன்” என்று அவருக்கு பதில் கொடுத்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் என்பது நினைவுகூறத்தக்கது.