Categories
உலக செய்திகள்

எங்களுக்கு இந்த தடுப்பூசி வேண்டாம்… “இத போட்டா ரத்தம் உறையுது”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள்…!!

பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா  நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது.

கொரோனோ என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் குடிமக்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா தயாரிக்கும் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களில்  பெரும்பாலானோருக்கு ரத்தம் உறைவதாக புகார் எழுந்துள்ளது என்று  தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரியாவில் செவிலியர் ஒருவருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நாட்களிலேயே ரத்தம் உறைதல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். இதனால் ஆஸ்திரியா நாட்டின் சுகாதார நிர்வாகம் அஸ்ட்ரோஜெனெகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை நிறுத்திக்கொண்டது. இதேபோல் லக்சம்பர்க், லித்வானியா ,லட்வியா, எஸ்டானியா, டென்மார்க் போன்ற நாடுகளும் அஸ்ட்ரோஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்ட்ரோஜெனெகா நிறுவனத்திலிருந்து 17 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட  தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிரிட்டனில் அஸ்ட்ரோஜெனெகாவின் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்படவில்லை என்று அங்கு உள்ள சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Categories

Tech |