Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… “திருமண முன்னேற்றம் ஏற்படும்”… பணியில் நிம்மதி…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக ஓரளவிற்கு மேன்மைகளை அடைய முடியும்.

பெரிய முதலீடுகளை கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு  பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சனிக்கிழமை கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 4

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |