Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கலகலப்பு இருக்கும்..! தன்னம்பிக்கை பிறக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும்.

தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட வேண்டி இருக்கும்.பொது வாழ்க்கையில் நீங்கள் சில விஷயங்கள் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுபகாரிய பயிற்சியில் சிறிய தடை வந்து செல்லும்.

தொழிலில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பேச்சில் கடுமை காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்கும். வியாபாரத்தை லாபகரமாக செய்ய சில சிக்கல்கள் இருக்கும். தேவையான பண உதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். வாக்குறுதிகள் எதையும் கொடுக்க வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். ஆவணங்களையும் சரிபார்த்து கொண்டு செல்லுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் பேச வேண்டும்.தனுசு ராசிக்காரர்கள் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும்.

கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகள் முயற்சியின் பேரில் வெற்றி பெற முடியும். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். காதலில் உள்ளவர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டியிருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள் இல்லையெனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |