மகரம் ராசி அன்பர்களே…! என்று சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் ஆலோசனை தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மாற்று மருந்து சிலது பயன் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும் பிரச்சனை இல்லை. நீங்களும் கலகலப்பாக தான் காணப்படுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்கக் கூடும்.
பெண்களுக்கு எதிரிகளும் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சந்தோஷமான மனநிலையில் தான் இன்று இருப்பீர்கள். மகரம் ராசி காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை.மாணவக் கண்மணிகளுக்கு ம் எந்த விதத்திலும் பிரச்சனை இருக்காது.
கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் இல்லையெனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.