மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று அனுகூலமான நிலை உருவாகும்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில் வளர்ச்சியில் திருப்பம் நிலவும். மக்களின் ஆதரவை கண்டிப்பாகப் பெறமுடியும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.
உங்களின் வளர்ச்சியை உயர்த்திக் கொள்வீர்கள். முதலீட்டினை அதிகரிக்க முயற்சிகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும். மற்றவர்கள் உங்களை பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.