மகரம் ராசி அன்பர்களே..!
இன்று தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கக்கூடும். உங்களின் மனதில் உள்ளவற்றை மனைவியிடம் வெளிப்படுத்துங்கள். தொழிலுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது இல்லத்தில் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம்.
யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.