Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பணவரவு பெருகும். எடுத்த முடிவுகளை யோசித்து செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். கலகலப்பான சூழல் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். சில விஷயங்களில் அனுசரித்துச் செல்லவேண்டும்.

பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெண்கள் செயலை யோசித்து செய்ய வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதல் உங்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும். வெற்றிகரமான நாளாக இருக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மாணவர்களுக்கு எதிர்கால திட்டங்கள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Categories

Tech |