கன்னி ராசி அன்பர்களே…! இன்று முக்கியமான பணி நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். ஆதாயம் சீராக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். சிவ நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடக்கும் நல்லதே நடக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
செலவை மட்டும் தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கவனம் வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக பணியாளர்களிடம் கவனம் வேண்டும். வசீகரமான தோற்றத்தில் காதலில் வயப்படும் சூழல் இருக்கும். வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகவே இன்று அமையும்.
எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். சக மாணவர்களிடம் தயவுசெய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாடு எந்த காரியத்தையும் செய்யுங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.