மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனையில் புத்துணர்ச்சி பெருகும் நாள் ஆக இருக்கும்.
திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தாராள பணவரவு இருக்கும். அதிக லாபத்தையும் ஈட்டி கொள்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீடு வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கக்கூடிய எண்ணம் மேலோங்கும். மனோ தைரியம் கூடும்.
வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கு. உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செய்யும் செயலில் கவனம் இருக்கட்டும். பணம் விஷயங்களில் கவனம் இருக்கட்டும்.
ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பண பொறுப்பை தயவு செய்து ஏற்றுக் கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்ளவேண்டும் சிறிதளவு தயிர் சாதம் அன்னம் வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்.