கும்பம் ராசி அன்பர்களே…! மனதில் உதித்த வண்ணம் செயல் வடிவில் வரும்.
நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். வருமானம் நல்லபடியாக இருக்கும். மனதிற்கு திருப்திகரமான சூழல் ஏற்படும். பெண்கள் கலை அம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவார்கள். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். நிதி உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சல் குறையும்.
இன்று கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் நாடாக இருக்கும். பிரச்சனைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும்.முக்கியமான விஷயங்களை தயவுசெய்து யாரிடமும் சொல்ல வேண்டாம். பண விஷயங்களில் எப்பொழுதும் கவனம் தேவை. பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அந்த வேலையை நீங்களே முன்னின்று செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.
உங்களை எடுத்தெறிந்து பேசி அவர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும்.உங்களை பார்த்து சவால் விட்டு அவர்கள் மனம் உருகி விடுவார்கள். அனைத்து விஷயங்களிலும் நல்லது நடக்கும். செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்த முடிவினை நிலையாக இருப்பீர்கள்.பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு சில விஷயங்களை செய்யுங்கள். மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் எப்பொழுதும் போலவே நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்பை வெளிப்படுத்துங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் வெள்ளை நிறம்.