Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புதிய சேர்க்கை உண்டாகும்..! வாய்ப்புகள் தேடிவரும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தி பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும்.

பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வசீகரமான தோற்றமும் இன்று வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |