கடகம் ராசி அன்பர்களே..!
இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும்.
இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள்.
தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். சில கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்த வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.