கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக இருக்கும்.
சோதனையையும் சாதனைகளாக மாற்றுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடின உழைப்பு தேவைப்படும். படிப்பிலும் கூடுதல் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். தேவையான உதவிகளும் கிடைக்கும். காரியத்தில் சிறிய தடைகள் உண்டாகும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.தேவை இல்லாத விசயத்திற்கு அலைந்து ஆதாயம் இல்லாமல் வரவேண்டாம்.
யோசித்து சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். புத்தி சாதுரியமாக செயல்பட்டால் லாபகரமான நிலை உருவாகும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள் உற்சாகமாக இருங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகள் ஏதும் இல்லை. சகோதரர் ஒற்றுமை பலப்படும். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கை வெளிப்படும்.
கணவன் மனைவி இருவரும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை சரி செய்ய வேண்டும். தேவையில்லாத வாக்கு வாதம் வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்தவர் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.