மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும்.
அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு வேண்டும். வீண் அலைச்சல் உண்டாகும். பிரச்சனையைக் கண்டு துவளாமல் போராடுவீர்கள். மற்றவர்களின் துன்பத்திற்கு ஆளாவீர்கள். எதிரிகளின் தொல்லையும் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை மேற்கொள்ளுங்கள். நண்பர்களிடம் ரகசியத்தை பகிர வேண்டாம். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் காட்டாதீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.