Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திருப்தி கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும்.

வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு திருப்தியளிக்கும்.

அடுத்தவர்களின் உதவிகள் கிடைக்கும். பேச்சினை கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் அமையும். செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகினால் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் வேண்டாம். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |