மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று பிரிந்து சென்றார்கள் வந்து இணைவார்கள்.
விரும்பிய பொருட்கள் கையில் வந்துசேரும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் தலைதூக்கும். எப்பொழுதும் கவனம் மற்றும் எச்சரிக்கை என்பது வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இடமாற்றம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பிள்ளை களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பர விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணியவேண்டும். சாம்பல்நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் மற்றும் பிரவுன் நிறம்.