ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று குழப்பம் அகலும் இருக்கும்.
சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள்.
வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். காதலில் உள்ளவர்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் இளநீல நிறம்.