Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுசரணை தேவை..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும்.

தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். சக மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பேசும்பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளநீல நிறம்.

Categories

Tech |