மேஷம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும்.
பாதியில் நின்ற பணி முழுவதுமாக முடியும். குடும்பத்தில் சிறிது குழப்பம் உண்டாகும். சக நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கையில் நல்ல வழி பிறக்கும். மங்கள ஓசை மனையில் கேட்கும். வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். பெண்களுக்கு காரியங்கள் கைக்கூடி சிரமம் குறையும். பெண்களுக்கு முதுகு வலி உண்டாகும். சில பணிகள் அலைச்சலை கொடுக்கும். குழந்தைகளிடம் கவனம் வேண்டும்.
காதல் விஷயத்தில் புரிதல் அவசியம். பார்த்து பக்குவம் வேண்டும். மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கல்வி பற்றிய புரிதல் உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள்ளு கலந்த சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.