Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (10-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

10-11-2020, ஐப்பசி 25, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பின்இரவு 03.23 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.

மகம் நட்சத்திரம் காலை 07.56 வரை பின்பு பூரம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

முருக வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் – 10.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும்.விட்டுக்கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகள் தீரும். பொருளாதார பிரச்சனை சுமாராக இருக்கும் ஆனால் உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். உத்யோகத்தில் தடை தாமதம் ஏற்படும். வாகனங்களால் வீண் விரையம் ஏற்படும்.தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது. பொறுமை வேண்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த வேலை செய்தாலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவது நல்ல முயற்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வீண் செலவு உண்டாகும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை கொடுக்கும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும்.உத்தியோகத்தில் வேலையாட்களிடம் பொறுமையாக செல்லுங்கள் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டு உண்டாகும். தொழிலில் அரசு வழி உதவி உண்டாகும். பணவரவு இருக்கும். கடன்கள் தீரும். குழந்தைகள் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். வீட்டில் சந்தோஷம் இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாட்டால் வீண் பிரச்சனை உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உத்தியோக ரீதியில் ஏற்படும் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலேயே இனிய செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களின் உதவி யால் பிரச்சனை அனைத்தும் நீங்கும். உத்தியோக ரீதியில் வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். கடன்கள் வசூலாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உறவினர்களுடன் தேவையில்லாத மனக்கசப்பு உண்டாகும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் மேலதிகாரிகளிடம் பிரச்சனை இருக்கும்.தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரை நம்பி கொடுத்த வாக்கால் பிரச்சினையை சந்திக்க நேரும். தேவை இல்லாததால் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். எந்த செயல் செய்தாலும் நிதானம் வேண்டும். வெளி பயணங்களை தவிர்க்கவும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் பெருமை சேரும்படி இருப்பார்கள். தொழிலில் வேலைப்பளு குறையும்.புதிய வீதியில் எடுக்கும் முயற்சி அனைத்திற்கும் நண்பர்களின் பலன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து இருப்பார்கள். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

Categories

Tech |