மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மிகவும் பொறுமையை கையாள வேண்டும்.
எடுத்துக்காட்டியத்தில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
தேவையற்ற பேச்சினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்ளும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெரிய காரியங்களில் ஈடுபடும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். தேசத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாளை தொடங்குங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.