மேஷம் ராசி அன்பர்களே..! அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும்.
இன்று நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு. அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.