கடகம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்று உங்கள் செயலில் திறமை நிறைந்து காணப்படும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை வேண்டும். விருந்தினர்களின் வருகை இருக்கும். கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும்.
திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு வேலைகளில் முன்னேற்றம் இருக்கிறது. இல்லத்தில் மட்டும் பணிச்சுமை அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். ஆன்மீகத்திற்காக செலவுகள் செய்வீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வி பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.