கடகம் ராசி அன்பர்களே..!
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
வெற்றி கண்டிப்பாக உண்டாகும். புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும்.
பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பது, முன்ஜாமீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். தீர ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்தால் மட்டுமே இன்றைய நாளை நல்ல நாளாக மாற்றமுடியும். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று உணவுக் கட்டுப்பாடு என்பது வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநான் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.