கும்பம் ராசி அன்பர்களே…! முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம்.வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சில திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவில் பிரச்சனை இல்லை. செலவைக் கட்டுப்படுத்தி ஆக வேண்டும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பேசும்பொழுது எச்சரிக்கையாக பேச வேண்டும். தெய்வீக பக்தி கூடும். வீண் பழி சுமக்க நேரிடும்.
வேலையில் சில மாற்றம் உண்டாகும். வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும். மருத்துவ செலவுகள் இருக்கும். சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் இருக்கும்.மற்றவர்களிடம் வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுமான வரை பொறுமையாக இருக்க வேண்டும். பாராட்டுக்கள் கிடைக்க கஷ்டமாக இருக்கும்.
காதலில் உள்ளார்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.