மீனம் ராசி அன்பர்களே..!
இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படும். சுய சிந்தனையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். உத்தியோகத்தில் உயர்வுப்பெற எடுக்கும் முயற்சிகள் நல்லபலனை கொடுக்கும்.
இன்று உங்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் கைக்கூடி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.