மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும்.
விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும்.
பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.