Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வெற்றி இருக்கும்…! சுப செய்தி உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.

புதிய திட்டங்கள் உருவாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பிறர் பார்வையில் அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். இன்று தாயின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.காரியங்களில் தாமதமான போக்கு இருக்கும். வார்த்தைக்கு மதிப்பு வெளிவட்டாரத்தில் கிடைக்கும். குடும்பத்தார் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

அளவுடன் நீங்கள் பேசினால் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படிக்க வேண்டும். கல்விக்காக எடுக்கும் முயற்சி சாதகப் பலனை கொடுக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். பயணம் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். காதலில் உள்ளவர்கள் திட்டமிட்டபடி எதையும் செய்ய வேண்டியிருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |