Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! ஆபரணங்கள் வாங்க கூடும்…!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்களுடைய கையில் வந்து சேரும்.

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியமும் அனுகூலத்தை கொடுக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க் கூடும். பிற்பகலுக்கு மேல் உங்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மையும் கிடைக்கும். பேசும்பொழுது பொறுமை என்பது ரொம்ப ரொம்ப அவசியம். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க, மனம் விட்டுப் பேசுவது நன்மையை கொடுக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வெற்றிக்காக இன்று கடுமையாக உழைப்பீர்கள். யாரிடமும் இன்று கைமாற்றாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். அதாவது பெரிய தொகையை பயன்படுத்தி எந்த ஒரு முதலீடுகளும் செய்ய வேண்டாம்.

வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகவே செல்லுங்கள். யாரிடமும் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எந்த வித ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதலர்கள் எப்போதும் போலவே பொறுமை காப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |