Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிம்மதி கிடைக்கும்..! நம்பிக்கை நிறைந்திருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள்.

தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகிச்செல்லும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் சரியாகும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக நண்பர்கள் உங்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆசிரியர்களின் உதவியும் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு கொடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |