இன்றைய பஞ்சாங்கம்
14-11-2022, ஐப்பசி 28, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.24 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.15 வரை பின்பு பூசம்.
அமிர்தயோகம் பகல் 01.15 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 14.11.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலை பளு குறையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மனஅமைதி குறையும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெரியோர்களின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.