ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று சிக்கலுக்கு தீர்வு காண்பீர்கள். பேச்சினை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.