Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணவரவு இருக்கும்..! புத்துணர்ச்சி வெளிப்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சிலர் உங்களை குறை சொல்ல காத்திருப்பார்கள்.

செயல்களில் சுறுசுறுப்பு வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இசைப் பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். தன வரவுக்கு குறைவு இல்லை.நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் பிரச்சனை சரியாகும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணம் நல்லபடியாக கைகூடும். தன்னிச்சையாக இன்று முக்கிய முடிவு எடுக்கக் கூடும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். கம்பீர தோற்றம்  வெளிப்படும். திருமணத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் காத்திருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் ஒன்றுமட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |