கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள்.
துணிச்சல் மிக்க வாழ்க்கை இன்று ஏற்படும். எந்த ஒரு காரியமும் சிறப்பாகவே செய்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கு அக்கறை அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.உத்தியோகஸ்தகர்கள் மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரவு திருப்தியைக் கொடுக்கும். எடுத்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். இன்று எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதேபோல் தேவையில்லாத மன குழப்பம் மட்டும் அடைய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
இதை செய்யலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை கேட்பது ஒன்றும் தவறு இல்லை, கண்டிப்பாக அதை நீங்கள் கேட்டு செய்யுங்கள். அதேபோல் யாரிடமும் நீங்கள் எந்த ஒரு விதத்திலும் மற்றவர்களைப்பற்றி குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அவர்களைப் பற்றிய பேச்சு வார்த்தையும் பண்ண வேண்டாம் சில பஞ்சாயத்துக்களில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். உங்களுடைய கருத்துக்கு மேல் கருத்து சொல்பவரிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களை பாராட்டி பேசுபவரிடமும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். திருமண முயற்சிகளை ஏற்பாடு செய்யுங்கள், நல்லபடியாகவே நடந்து முடியும். என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்:5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் வெள்ளை நிறம்.