மேஷம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் முயற்சிகளில் விரும்பும் பலன் கிடைக்கும்.
இன்று எதிர்பாராத சில நன்மைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று நீங்கள் விரைவாக பணியாற்றுவீர்கள். எதையும் எளிதாக முடிப்பீர்கள். மேலதிகாரிகள் சக ஊழியர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் இனிமையான பயணங்களை கழிப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் நிதிநிலையில் பொருத்தவரை நன்றாகவே உள்ளது.
இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது மிகுந்த ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள். நீங்கள் யோகா மற்றும் தியானம் போன்ற ஏதேனும் ஒரு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உங்களின் மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும். மாணவ மாணவியர்கள் இன்று கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள். மேஷ ராசி அன்பர்கள் இன்று முருக வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிஷ்ட திசை கிழக்கு. அதிஷ்ட எண் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நீலம்.