விருச்சிகம் ராசி அன்பர்களே…! அமைதியின்மை இன்று காணப்படும்.
நீங்கள் பொறுமையுடன் இருந்தால் இன்றைய செயல்களை கையாள முடியும். சற்றே சலிப்புடன் இருப்பீர்கள். எந்திரம் ஆன வாழ்க்கையாக உணர்வீர்கள்.நீங்கள் பணியை கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள். மேலும் நீங்கள் இன்று உங்கள் துணையுடன் புத்துணர்வு குறைந்து காணப்படுவீர்கள். நீங்கள் அவரை தவறாக புரிந்து கொண்டதே இதற்கு காரணமாக இருக்கும். உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்பை இழப்பீர்கள்.
எனவே கவனமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது மனம் எரிச்சலால் பாதிக்கப்படுவார்கள். கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு என்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருந்து கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3. அதிர்ஷ்டமான நிறம் நீல நிறம்.