Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்…! செயல்திறன் அதிகரிக்கும்…!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும்.

சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். அதேபோல் எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்துச் சேரும். இன்று சில விஷயங்களில் மட்டும் கவனமாக இருங்கள், அதாவது தீ ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். பெண்கள் சமையல் செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். நெருக்கடியான சில சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத நல்லது உங்களுக்கு நடக்கும்.

அதேபோல் இன்று வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். நட்பாலும் சில நல்லக் காரியங்கள் நடைபெறும். இன்று தூரத்தேசத்தில் இருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மிக முக்கியமாக ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கும். இன்று வருமானம் இருமடங்காக இருக்கும். இன்று நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சுமுகமாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகமிக சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |